தங்கையின் நினைவுகள்:(Sister Memories)

தங்கையின் நினைவுகள்:(Sister Memories);
 
தங்கையின் நினைவுகள்:(Sister Memories);

அழகிய என் தேவதை,  அலங்கரிக்கப்பட்ட என் வெண்ணிலா உன்னைக் காண்பதற்காக பல நாட்களாக இரவில் தூங்காமல் காத்திருந்தேன், நீ வரும் அந்த தருணத்தில் என் கண்கள் இரண்டையும் இறுக்கக் கட்டி வேடிக்கை பாரத்தனர் சிலர். நீ எப்படி வெண்ணிலாவை பார்க்கிறாய் என்று......

ஆனந்த கண்ணீர் வரும் இந்த நேரத்தில், ஆழ்ந்த கண்ணீர்கள் ஏனோ?மண மேடையில் தங்கை மகிழ்கிறது உள்ளம் , அதை கான வழியின்றி தவிக்கின்றது மறு நிமிடம்.

சில உறவுகள் நம்மை வேண்டாம் என்று ஒதுக்கியப்பின்,மீண்டும் அந்த உறவுக்காக ஏங்குவது  என்பது ??

காத்திருந்த அந்த தருனங்கள், காண வழியின்றி தவிக்கின்ற நிமிடங்கள்.....

அண்ணமிட்ட என் கைகளை மன பந்தலில் காண வழியின்றி சதி செய்தவர்கள் வாழ்க.......

ஆயிரம் உறவுகள் சேரும் அந்த இடத்தில் எனக்கு சிறு இடமில்லையா?

திருமணம் என்பது சில உறவுகளை இணைப்பதற்கு என்பார்கள், ஆனால் இன்று சிலர் உறவுகளை பிறிப்பதற்காகவே நடத்துகிறார்கள் ..

ஒன்றாய் சேர்ந்தே வளர்ந்தோம், திரிந்தோம், மகிழ்ந்தோம் ஆனால் பகை ஏதுமின்றி இந்நிகழ்விற்கு அழைக்காதது ஏனோ?

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் இத்தருனத்திற்காக, அதனால் தான் என்னவோ என்னை காண வழியின்றி ஏங்க செய்கிறார்கள் ....

அண்ணாக இருந்து காணவிட்டாலும் பரவாயில்லை, ஆயிரம் பேர்களில் ஒருவனாககூட  காண வழி இன்றி செய்து விட்டார்கள். 

கலங்கிய என் இதயம்... காண முடியாத இந்நிகழ்வு, ஏக்கத்துடன் காத்திருந்தேன் கடைசிவரை ஏமாற்றமே மிஞ்சியது ...

முன் நின்று செய்ய வேண்டிய  திருமணத்தில் , பின் நின்று கூட காண வழி இல்லை.. இப்போது என்ன பிழை செய்தேனோ ?

வேண்டாம் என்று என்னை வெறுத்து ஒதுக்கிய உறவுகளை, என்னால் ஒதுக்க முடியவில்லை காரணம் நீ மட்டுமே தங்கையே!!!

அண்ணாக இருந்து காணாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு அன்னியனாகக் கூட முடியவில்லை என்பது தான் வேதனையைத் தருகிறது.

புரியாத புதிர்கள்!? புதிர் போட்ட உறவுகள்.. விடை தேடும் நெஞ்சங்கள் சிலர் , புதிர் புரியாமல் நிற்கும் பலர்

பகையாளி என்றாலும் பத்திற்கு ஒரு முறையாவது அழைப்பார்கள், ஆனால் இங்கு அந்த அழைப்பும் இல்லை .....

அனைவரையும் அழைத்தேன் என் தங்கைக்கு திருமணம் என்று ஆனால் சிலர் என்னையே அழைக்கவில்லை .....

யார் யாரோ வரும் என் தங்கை திருமணத்திற்கு யாரோ ஒருவர் போல கூட என்னால் வர முடியவில்லை ....
திருமணத்தை
 காண தடை போட்ட உறவுகள், அதனால் தள்ளாடும் சில இதயங்களின் கண்ணீர் தான் மீதம் .

உறவுகளால் தனிமை  படுத்தப்பட்ட நான், மனம் ஏற்க மறுக்கிறது ஆனால் இருந்தும் ஆவது என்ன?

கண்களில் கண்ணீர் கசிகின்றது!
நினைக்கும் பொழுதெல்லாம்,
நான் செய்த தவறினை என்னி..

மற்றவர்களுக்கு தெரிய தேவை இல்லை நான் உன் மீது கொண்டுள்ள அன்பு, என் கண்களில் கசிகின்ற கண்ணீருக்கு மட்டும் தான் தெரியும்... 

காலம் கடந்த யோசனையும், அதோடு வரும் கண்ணீரும்    அற்தமற்றது அல்ல, அப்போது அதன் அந்த அர்தத்தினை புரியாததால் ஏற்படுவது.

விரும்பிய உறவு  பிரிந்து சென்ற பிறகு ... பழகிய பழக்கம் எல்லாம் நினைவிற்கு வரும், இதமாக அல்ல கடும் வலியாக..

உடலில் ஏற்பட்ட காயங்களை பார்க்க வரும் உறவுகள், மனதில் ஏற்படும் காயங்களுக்கு மதிப்பதில்லை, உண்மையில் வெளிக்காயம் தரும் வலியை விட அது மிகவும் வலியது ....

மனதிற்கு பிடித்த நபர் , யாரோ போல் பாரக்காமல் செல்வது மரணத்தை விட கொடுமையானது...

இறைவா பிரிவைத் தாங்காத இதயத்தை ஏன் எனக்கு கொடுத்தாய்?

எங்கள் பிரிவில் சிலர் மகிழ்சியைத் தேடிக் கொள்கின்றனர், ஆனால் எங்கள் பிரிவு நிரந்தரம் அல்ல. .....

முறைப்படி அழைத்தீர்கள் பலரை, முறையின்றியாவது அழைக்கவில்லை என்று ஏங்கும் சிலர்.

எனக்கு துன்பத்தை தர வேண்டும் என்று நினைத்தவர்கள் அதில் வெற்றி கண்டு மகிழ்சியோடு இருக்கிறாகள், இந்த வெற்றி அவர்களுக்கு கடைசி வரை அமையாது ....

என் பல நாள் எதிர்ப்பார்ப்பை வாழ்நாள் எதிர்பார்ப்பாக மாற்றி விட்டனர் சிலர் அதுவும் சில தினங்களில் ...

முடிந்த பின் கண்ணீர் வந்து வேதனை தருவதை விட முதலில் அதனை தீர ஆராய்ந்தல் வேண்டும்

அமைதியான என் இதயம் இன்று முள்ளைவிட கடினமான ஒன்றைக் கொண்டு துளைக்கிறது தினம் தினம் .

இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சி செய்கிறேன்.... முடியாமல் தினம் தினம் தவிக்கிறேன்,

இதுவரை நான் பட்ட துன்பங்களில், இது போன்று ஒன்று கொடிய வலியினைத் தரவில்லை ...... இந்த வலி வரும் என்று தெரிந்திருந்தால் உயிர் போயினும் சென்று இருப்பேன் அங்கு: ...

உறவுகள் என்னை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினர், நானும் ஏதோ வீராப்பில் என்னால் அப்படி இருக்க முடியும் என்று நினைத்தேன், ஆனால் தங்கையே உன்னை பிரிந்துவிட்டேன் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை ......

நான் இல்லை என்றால் நீ மகிழ்சியாக இருப்பாய் என்று என்னை அழைக்காமல் விட்டார்கள், அது அழகாய் அமைந்தால் நான் மகிழ்வேன்..

உனக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்த என் கனவுக் கோட்டை
ஒரே நேரத்தில் சரி்ந்து போனது
வருந்தி தவிக்கிறேன் , இருந்தும் என்ன பயன் ஏக்கம் மட்டுமே மிஞ்சும் ...... 

என்னுடைய தவிப்புக்களை யார் அறிவார்? எப்போது உனக்கு புரியும் ! அதுவரை உனக்கு கெட்டவனாகவே நான் ..... 

ஒரு நிமிட அவதிக்காக, ஒரு வாழ்நாள் அன்பைத் தொலைத்து நிற்கிறேன்.

இனி எப்போது உன் சிரித்த அந்த முகத்தினை நான் பார்க்க என் அன்பு தங்கையே ?

இந்த அண்ணனுக்கு ஏற்பட்ட இன்னல்களும், சூழ்நிலையும் வேறு யாருக்கும் ஏற்பட கூடாது நானே கடைசியாக இருக்க வேண்டும் கடவுளே!

இனி எப்படி உன் முகத்தில் நான் முழிப்பேன்? மகப் பெரிய தவறினை செய்தேன் அனால் என் தவிப்பு அதைவிட அதிகம் இருந்தும் பயன் என்ன ?

நீ மட்டும் ஏன் என்னுடன் நெருங்கிப் பழகினாய், மற்றவர்களைப் போல் நீயும் இருந்து இருந்தால் எனக்கு இல்லை இந்த துயர்.

என்னை உதறிய உறவுகளால், சிதறிய என் நட்பும் சில ..... இதனால் காயங்கள் சிறிதாக இருந்தாலும் வலி பெரியதாக உள்ளது, தாங்க முடியவில்லை தள்ளாடும் என் இதயம்...

கலங்கிய என் கண்களில் கண்ணிர் கசிந்தபடி உள்ளது நிறுத்தவோ முடியவில்லை காரணம், ஒவ்வாரு முறையும் நினைத்து தவிக்கிறது தங்கையே இனி நான் யாரிடம் சொல்வேனோ?

இன்று என் உடல் மட்டும் தான் என்னிடம் இருக்கிறது, உள்ளமோ கண்ணீருடன் கேட்கிறது, எப்போது என்னோடு பேசுவாய் என்று ......

இப்போது என்னிடம் இருப்பது   வெரும் அன்பு மட்டும் தான் தங்கையே, அன்பிற்கு என்ன மதிப்பிறகு என்று என்னை அழைக்காமல் விட்டனரோ என்னவோ?

உயிர் போயினும் இத்துயர் பிறர் அடைய வேண்டாம், முதலும் கடைசியுமாய் இந்த அண்ணனே இருக்கட்டும் இந்த உலகில் ......

நான் இறக்கும் வரை இந்த பழி போகாது என்றால், என்னை இந்த பழிக்கு ஆளாக்கியவர்களையும் இந்த உலகம் மறக்காது .......

நான் பிறந்தது முதல் இந்நாள் வரை, இது போன்ற துயரத்தினை கண்டதில்லை , இந்த அனுபவம் புதிது ஆனால் அது தரும்  "வலியோ" மிகவும் கொடுமையானது , கொடூரமானது .........

தங்கையின் சுப, துக்க நிகழ்சியில் உடன் இருப்பவன் தான் அண்ணன் என்றால் அப்போது நீ யார் என்று கேட்கிறது என் உள்ளம் ? இதற்கு பெயர் தான் விதியோ',?

பிரிந்த என் நட்பு, பிரித்தவர்கள் சிலர், வலியில் மட்டும் நான், நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் மீண்டும் இணைவோம் என்று?

நான் என் தங்கை மீது எந்த அளவிற்கு அன்பு வைத்துள்ளேன் என்பது இந்த பிரிவு மட்டுமே உணந்தியது கடும் வலியாக ..........

காலம் எத்தனை ஆண்டுகள் மாறினாலும், நான் உன் மீது வைத்திடுக்கும் அன்பு மட்டும் மாறாது?

இணை பிரியாத நமது அன்பு நெஞ்சத்தில் , வஞ்சத்தை தெளித்தவர்கள் யாரோ ?

எங்கள் உறவினை பிரித்தவர்களாவது நன்றாக இருக்கட்டும், வலியை எனக்கு மட்டுமே இருக்கட்டும், பிரித்தவர்களுக்குத்  தெரியாது பிரித்தது உறவை மட்டும் தான் எங்கள் அன்பை இல்லை என்று ..

எவ்வலியும் தாங்க எனக்கு கடினமான மனது இருக்கிறது என்று நினைத்தன், ஏனோ இதை மட்டும் எற்க மறுக்கிறது, என் தங்கை அல்லவா அப்படித்தான் இருக்கும் ...

என் நினைவுகளில் வேறு எதுவும் இல்லை உன்னைத் தவிர என்றும் உன் நினைவோடுதான் நான் வாழ வேண்டும் என்பது காலத்தின் கட்டளையோ?

என்னை பற்றி என்னென்ன கனவுகள் கண்டிருப்பாய் தங்கையே, அத்தனையும் ஒரே நேரத்தில் பாழாகி விட்டதே நினைத்து நினைத்து வருந்துகிறேன்.

என் கண்கள் இதுவரை கண்டதில்லை இந்த அளவு கண்ணீரை, கரை புரண்டு ஓடுகிறது தங்கையே உன்னை நினைத்து .....

என்னுடன் பழகியவர்கள் கேட்க்கிறார்கள் ஏன் இந்த மாற்றம் என்று, எப்படி அவர்க்ளுக்கு புரிய வைப்பேன் தங்கை உன் பிரிவினை .......

பல கனவுகளோடு சென்றேன் என் தங்கை திருமணத்திற்கு, வடியாத கண்ணீரோடும் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.....

கண்கள் களங்கிய நிலையில், காத்திருப்பேன் உன் 
நினைவுகளால்.

இந்த அண்ணன் வேண்டாம் என்று நம் உறவு, என்னால் முடியாது என் உயிர் இருப்பன் உன் நினைவுகள் இருக்கும் .....
....
கண்ணீர் கடலில் மூழ்கி தத்தளித்த என் இதயத்திற்கு, நீ பேசியது சிறிது ஆறுதல் தருகிறது, இருந்தும் என் குற்ற உணர்வு என்னை விட்டு அகலவில்லை...

என்றும் என் தங்கையின் நினைவுகளில் 
பெரியசாமி

Comments

Popular posts from this blog

பயணத்தின் நினைவுகள்

காமராஜர்