பயணத்தின் நினைவுகள்
பயணத்தின் நினைவுகள்: பயணத்தின் நினைவுகள் மு தன் முறை பேருந்தில் பார்த்தேன் இன்று அவளை, மறு முறை காண்பேனோ என தெரியவில்லை, எந்தக் கம்மலும் அவ்வளவு அழகாக நான் பார்ததில்லை, என்னவளின் காதில் இருப்பதனால் என்னவோ கொள்ளை அழகு அந்த கம்மலுக்குள் . பேருந்தின் காற்றில் வாரிய அவள் கூந்தல் முடியில் சில மட்டும் அதிஸ்டசாலிகள், ஏனெனில் என்னவளின் கண்ணத்தை தொடுகின்றன, அதனை சரி செய்த பின்னும் கேட்க மறுக்கின்றன, மறு முறை எனக்காக தொடுகின்றன போலும் என்னவளின் கண்ணத்தை. நான் பல முறை பார்தனேன், அவள் பார்வை என் மீது விழ வேண்டும் என்று, இறுதியில் நான் தான் விழுந்தேன் அவளின் கள்ளச் சிரிப்பினில். பேருந்தின் வெளியே எட்டிப் பார்த்தாள் அவள், அவளை மட்டுமே பார்க்கும் என்னை மட்டும் ஏனோ அவள் மறந்தாள். கண் சிமிட்டி பேசும் அவளின் அழகினை நான் கண் சிமிட்டாமல் பார்த்து ரசித்தேன். அவள் கண்களை மூடிக்கொண்டு கூட என்னை பார்க்கவில்லை. மலருக்கே அழகு சேர்ந்தது போலும் என்னவளின் கூந்தலில் இருப்பதால். கனவுகள் கலைந்தது போல் பேருந்து உணவகத்தில் நின்றது .என்னவள் கீழே இறங்கின...