பயணத்தின் நினைவுகள்
பயணத்தின் நினைவுகள்:
![]() |
| பயணத்தின் நினைவுகள் |
முதன் முறை பேருந்தில் பார்த்தேன் இன்று அவளை, மறு முறை காண்பேனோ என தெரியவில்லை, எந்தக் கம்மலும் அவ்வளவு அழகாக நான் பார்ததில்லை, என்னவளின் காதில் இருப்பதனால் என்னவோ கொள்ளை அழகு அந்த கம்மலுக்குள் .
பேருந்தின் காற்றில் வாரிய அவள் கூந்தல் முடியில் சில மட்டும் அதிஸ்டசாலிகள், ஏனெனில் என்னவளின் கண்ணத்தை தொடுகின்றன, அதனை சரி செய்த பின்னும் கேட்க மறுக்கின்றன, மறு முறை எனக்காக தொடுகின்றன போலும் என்னவளின் கண்ணத்தை.
நான் பல முறை பார்தனேன், அவள் பார்வை என் மீது விழ வேண்டும் என்று, இறுதியில் நான் தான் விழுந்தேன் அவளின் கள்ளச் சிரிப்பினில்.
பேருந்தின் வெளியே எட்டிப் பார்த்தாள் அவள், அவளை மட்டுமே பார்க்கும் என்னை மட்டும் ஏனோ அவள் மறந்தாள்.
கண் சிமிட்டி பேசும் அவளின் அழகினை நான் கண் சிமிட்டாமல் பார்த்து ரசித்தேன். அவள் கண்களை மூடிக்கொண்டு கூட என்னை பார்க்கவில்லை.
மலருக்கே அழகு சேர்ந்தது போலும் என்னவளின் கூந்தலில் இருப்பதால்.
கனவுகள் கலைந்தது போல் பேருந்து உணவகத்தில் நின்றது .என்னவள் கீழே இறங்கினால், உணவகத்தில் ஒரு பாடல் அது ( வெரசா போரவளே புதுசா ) எனக்காக ஒலித்தது.
அவளின் நடை அழகினை ரசிக்கத்தான் எனக்காக பேருந்து உணவகத்தில் நின்றது போலும்.
கண்ணத்தை தொடும் என்னவளின் கூந்தலை, . அவளின் விரல்கள் சரி செய்யும் அழகினை சலிக்காமல் ,பார்க்கலாம் இறுதி வரை . என் மனம் கூந்தல் முடி எப்போது கண்ணத்தை தொடும் என்று காத்திருக்கும்.
அவள் என்ன கதை பேசிக் கொண்டு வருகிறாள் என்று தெரியவில்லை, என்னைப் பற்றி பேசவில்லை என்பது மட்டும் தெரியும், அவளின் இனிமையான குரல் என் காதில் விழ வேண்டும் என்று பேசுகிறாள் போலும்.
அவளின் கண்களைப் பார்த்தப் பின்பு தான் யோசித்துப் பார்த்தேன், இன்று காதலர் தினம் என்று, நினைக்கும் போதே என் முகத்தில் புன்முறுவல், ஆனால் என்னவளுக்கு இல்லையே .....
பேருந்தில் எத்தன்ன பேர் சிரித்தாலும் , அவளின் சிரிப்பு மட்டும் என் மனதை அழகாய் சாய்த்து அவள் பக்கமாய் ஈர்த்தது.
அவளுக்கென ஒரு இருக்கை கிடைத்தது அவள் அமர்வதற்கு, அவள் அமரவில்லை அருகில் இருந்தவரை அமர வைத்தாள், அவளின் குனத்தை ரசிப்பதை விட, என்னை பார்க்க எனக்காகத்தான் அவள் அமர மறுத்தாள் போலும்,
அவள் திடீரென்று என்னைப் பார்த்தல், நானும் பார்த்தேன், மீண்டும் அவள் பார்த்து சிரித்தால் , கண்களை உருட்டிப் பார்த்தால் நானும் என்னை மறந்து ரசித்தன் என்னவளை முகத்தில் பல பாவனைகளை செய்துக் காட்டினால், அவளை ரசித்தப்படியே மெய் மறந்து போனேன் என்னவளின் முக பாவனையைப் பார்த்து.. நான் பார்க்காத போதும் அவள் பார்த்துக் கொண்டே இருந்தால், அருகில் பார்த்தேன் ஒரு . பச்சிளங் குழந்தை, அவள் இவ்வளவு நேரமும் அந்த குழந்தையைப் பார்த்து தான் இதெல்லாம் செய்தாள் போலும், குழந்தக்கு நன்றி சொன்னேன் மனதில், என்னவளின் முக பாவனையை ரசிக்க எனககொரு வாய்ப்பு என்பதனால்...
அவளுக்கு என்ன தாகம் என்று தெரியவில்லை, தண்ணீர் குடிக்க முற்பட்டால் பேருந்து செல்லும் சாலையா குண்டும், குழியுமாய் இருந்தது ,அவளின் கைய்யில் இருந்த தண்ணீர் குப்பியின் மூடியினை மெல்ல மெல்ல கழற்றினாள், என் மனதை கழற்றியது போல, அவள் தன்னீரைக் குடிக்க ஆயுத்தமாக இருந்தாள், நானும் அதனை ரசிக்க ஆவளோடு இருந்தேன்... தண்ணீரின் அளவு பாதியாகத்தான் இருந்தது, தண்ணீர் பேருந்து வேகத்தில் அலம்பியது என் மனதினைப் போல.. ஒரு வழியாக தண்ணீரைக் குடித்தாள்,, அவள் மீது பட்ட நீர்த்துளிகள் என் மீதும் பட்டது, மயக்கத்தில் நான்.. அவள் sorry என்றாள். நான் நன்கு சிரித்த முகத்துடன் பரவாயில்லை என்றேன், அவளும் சிரித்தால் என் சிரிப்பை பார்த்து, மனதில் நான் தான் நன்றி சொல்ல வேண்டும் அந்த நீர்ந்துளிக்கு, என்னவளை என்னிடம் பேச வைத்தற்கு...
யாரையோ பார்ப்பது போல் அவள் என்னைப் பார்ப்பாள். நானோ யாரையும் பார்க்காமல் அவளையேப் பார்த்தேன் அவளின் அந்த ஓரப்பார்வைக்காக....
என்னவளின் காற்றில் பறக்கும் ஆடை என் மீது தாங்காத என்று ஏங்கினேன், இறுதியில் பட்டது , பட்டதும் அவள் என்னைப் பார்த்து சிரித்தாள், நானோ மெய் சிலிர்த்தேன். இப்பொழுதுதான் தெரிய வந்தது தெரியாமல் பட வில்லை தெரிந்தே தான் பட செய்தாள் என்று .. .
அவளது தோழி கைபேசியல் பாடல் கேட்டாள் (ear - Phone மூலம்) ஒரு பக்கம் மட்டும் போட்டு கேட்டாள் மறுபக்கம் போடாமல், நான் பேசுவதைக் கேட்கத்தான் என்னவோ வெறும் காதில் இருந்திருப்பாளோ? இருந்தாலும் இருக்கும் மனதில் ஒரு சிறு மகிழ்ச்சி..
அருகில் இருந்த ஒரு குழந்தை என்னவளின் மீது (Bubbles) சோப்பு நுரை முட்டை விட்டு விளையாடியது, அந்த (Bubbles) என்னவளின் மீது மலர்கள் தூவியது போல எனக்கு காட்சி அளித்தது....
அவள் இந்தக் குழந்தையை செல்லமாக அடித்தும் ,திட்டியும் விளையாடினாள் இதனை எல்லாம் நான் ரசிக்கவே செய்தாள் போலும்...
எனது இருக்கையின் முன் இருக்கையில் அவள் அமர்ந்திருந்தாள், திடீரென எழுந்து நின்றாள் அவள் தோழியுடன், அருகில் இருந்த அந்த அந்தக் குழந்தையை பார்த்து (Bye) என கை அசைத்தாள், அந்த குழந்தைக்கு என்ன தெரியும் அவள் இங்கு இறங்குகிறாள் என்று , எனக்காகத்தான் சொல்லியிருப்பாள்.பேருந்தும் மெல்ல மெல்ல வேகம் குறைந்து நின்றது.. அவள் பார்வை என் மீதா அல்லது அந்த குழந்தை மீதா? இதுவரை ஓரக்கண்ணால் பார்த்தவள் நேராகப் பார்த்து ( Bye என) கை அசைத்தாள்.. நானும் அந்தக் குழந்தையின் கையினைப் பிடித்து அசைத்தேன் எனக்கும் சேர்த்து ( Bye என) .
சிரித்தவாரே அவள் இறங்கினாள்
இறங்கியப் பின்னும் எட்டிப் பார்த்தாள் நானும் பார்த்தேன், என்னே அவளின் புன்முறுவல் , எனக்குத் தெரிகின்ற வரை அவளை பார்துக்கொண்டே வந்தேன்.... அவளும் திரும்பி திரும்பி பார்த்தவாரே சென்றாள். ஆனால் அப்போது அந்தக் குழந்தை திரும்பிப் பார்க்கவில்லை, அப்போ அவள் என்னைத்தான் பார்த்து சிரித்திருப்பாளோ இருந்தாலும் இருக்கும் ... அவளுக்குத் தெரியாது நான் நாளை இங்கு வர மாட்டேன் என்று... பாதை மறைந்தது
ஆனால் அவளின் கண்களும், சிரிப்பும் , செய்கைகளும் கேட்டவாரே உள்ளது...
நண்பர் செந்தில்குமார் அண்ணா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலை பயணத்தின்போது (14 / 02 / 2016)
பேருந்து எண்:TN : 32 N 3607
என்னவளை இரசித்தப்படியே
பெரியசாமி .......

Comments
Post a Comment